Tuesday 30th of April 2024 05:34:32 AM GMT

LANGUAGE - TAMIL
-
அமெரிக்காவில் கொரோனா பலி  4 இலட்சத்தைக் கடந்து அதிகரிப்பு!

அமெரிக்காவில் கொரோனா பலி 4 இலட்சத்தைக் கடந்து அதிகரிப்பு!


அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்துள்ளது.

நேற்று அமெரிக்காவில் 2,768 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மொத்த கொரோனா மரணங்கள் 4 இலட்சத்தைக் கடந்தன.

இன்று இதுவரையான தரவுகளின் பிரகாரம் அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 4 இலட்சத்து 11 ஆயிரத்து 520-ஆகப் பதிவாகியுள்ளன.

அத்துடன், நாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடி 48 இலட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே 27 ஆம் திகதி ஒரு இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவாகின. செப்டம்பர் 22 இல் இது 2 இலட்சமாக உயர்ந்தது. டிசம்பர் 14 ஆம் திகதி 3 இலட்சமாக உயிரிழப்புக்கள் அதிகரித்தன. இந்நிலையில் ஒரு மாதத்துக்கும் சற்று அதிகமான காலப்பகுதியில் இறப்பு எண்ணிக்கை மேலும் ஒரு இலட்சத்தால் அதிகரித்து 4 இலட்சமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் மே மாதத்துக்குள் 5 இலட்சத்து 66 ஆயிரத்தைக் கடந்து உயரும் என மாதிரிக் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE